Friday, May 9, 2008

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க - துணுக்குகள் - 7

கோயிலில் கொடி மரம் எங்கு உள்ளதோ அங்கு தான் நாம் விழுந்து நமஸ்காரம் செய்யனும். வேறு எங்கேயும் விழுந்து வணங்கக் கூடாது. சாமிக்கும் சாமியோட வாகனத்துக்கும் இடையிலே நம்ம போகக் கூடாது.

ஆண்கள் இரண்டு கைகளையும் தலைக்கு மேலே தூக்கியும், பெண்கள் தங்கள் கைகளை தன் நெஞ்சுக்கு நேராகவும் கூப்பி சாமியை வணங்க வேண்டும்.

பிள்ளையார் சன்னதியில் ஆண்கள் மட்டுமே தோப்புக்கரணம் போடணும். பெண்கள் தலையில் இருபுறமும் குட்டிக் கொண்டால் போதுமானது.

"இடம்" என்பது அமங்கள வார்த்தை. அதனால் தான் சாமி வருவதை சாமி "வலம் வருது" என்போம்.

நாம் பிறந்த உடனே மொட்டை அடிப்பது எதுக்கென்றால், நாம் நம் தாயின் கருவில் இருக்கும் போது தாயின் உடலில் உள்ள இரத்தம், மலம், சிறுநீர் எல்லாம் நம் உடலில் ஊறி இருக்கும். அவையாவும் நம் மயிர்களின் மூலமாக சிறிது சிறிதாக வெளியேறும். அப்படி வெளியேறுவது தலையில் தங்கி விடக் கூடாது என்றால் நாம் மொட்டை அடிக்க வேண்டும்.

1 comment:

Pintoo said...

enakku theriyatha niraya vishayangal. romba nallarukku. continue pannungaa