வீட்டு வைத்தியம் பற்றி பட்டாபி குறிப்பிடுகையில், ஜலதோஷத்திற்கு மிகச் சிறந்த மருந்து, நாட்டு வைத்தியக் கடைகளில் கிடைக்கும் சித்தரத்தை வேர். இந்த வேரை வாயில் போட்டு, உருவாகும் உமிழ் நீரை முழுங்கி வந்தால் ஜலதோஷம் சரியாகும் என்றார். ஜலதோஷத்துடன் இருமலும் இருந்தால், சித்தரத்தை வேருடன் சிறிது பனங்கல்கண்டு கலந்து காய வைத்து கசாயமாக அருந்தலாம்.சித்தரத்தை வேரைப் போலவே அதிமதுர வேரையும் கொதிக்க வைத்து குடிக்கலாம்.
புராணத்தின்படி, விரதத்திலேயே சிறந்த விரதம் உண்ணும் உணவை பழிக்காமல் இருப்பதும், வீணாக்காமலும் இருப்பதும் தான். திருவள்ளுவர் தான் சாப்பிட அமரும்போது ஒரு கிண்ணத்தில் தண்ணீரும் ஊசியும் எடுத்துக்கொண்டு தான் அமர்வாராம். ஏன் என்றால் ஏதாவது பருக்கை கீழே சிந்தினாலும், அதை ஊசியால் குத்தி தண்ணீரில் கழுவி உண்பார்.
தானத்திலே சிறந்த தானம் அன்னதானம் தான்.மஹாபாரதத்தில் கர்ணன் அனைத்து தர்மங்களும் செய்து இருக்கிறார். ஆனால் செய்யாத ஒரே தானம் அன்னதானம் தான். அன்னதானம் செய்வதற்காகவே மறுபடியும் சிறுதொண்டநாயனாராக பிறந்தார் என சிறுதொண்டநாயனார் கதையில் உள்ளது.
துணுக்குகள் தொடரும்......
Thursday, May 8, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment