Thursday, May 15, 2008

தூய தமிழில் கணிப்பொறி கலைச்சொற்கள்.

நன்பர்களே! கீழே உள்ள வாக்கியங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயருங்கள் பார்க்கலாம்.

நான் எழுதிய பணி யல்பிலா முடிவுற்றது.
நான் இன்று ஒப்பு-லக்க-மாற்றி வடம் வாங்கப் போகிறேன்.
முற்காலத்தில் மக்கள் கணக்குப் போடுவதற்கு மணிச்சட்டம் உபயோகித்தனர்.
நிரல் முறிந்தது.
உங்கள் நிரல் ஏற்புச் சோதனை செய்யப்படும்.

விடை கீழே!!!!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
The job I wrote abended.
I am going to buy analog to digital cable today.
those days, people used abacus for Mathematics.
program abended.
your program will undergo acceptance testing.

ஸ்...அப்பா கண்ணைக் கட்டுதே!!!!!

தொடரும்....

7 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

இந்தத் தமிழாக்கங்களை எங்காவது கண்டீர்களா? இல்லை, நீங்களே வேடிக்கைக்காத் தமிழாக்கியவையா?

Pintoo said...

hahaa =))..

Pintoo said...

rombaa kashtapattu kandu pidicheengalaa illa copy pasteaa

Srinivasan Palanisamy said...

I found tamil dictionary and selected words and formed the sentence.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

srinivasan, நீங்கள் செய்தது தவறு. இதே போல் ஆங்கில அகரமுதலியில் இருந்து எக்குத் தப்பாக சொற்களை எடுத்து வேடிக்கையான தமிழ் - > ஆங்கில மொழிபெயர்ப்புகளையும் செய்ய இயலும். எங்காவது உண்மையிலேயே பிழையான தமிழாக்கங்களைக் கண்டால் சுட்டிக் காட்டுங்கள். திருத்தலாம். நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் இது போல் ஒரு போதும் கோக்குமாக்காக மொழிபெயர்ப்பதில்லை. இது போல் வேடிக்கைக்கு எழுதுவது தமிழ் மொழிபெயர்ப்புகள் மேல் தேவையற்ற கேலி, கிண்டல், தாழ்வான எண்ணத்துக்குத் தான் உதவும்.

Srinivasan Palanisamy said...

ரவிசங்கர்,உங்களைப் போன்ற அறிமுகமில்லா நண்பர்களின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைக்கு என் அன்பு வணக்கங்கள். நான் இச்சொற்களை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியான வளர்தமிழ் மன்றத்தின் "கணிப்பொறி கலைச்சொல் அகராதி" யில் இருந்து கற்றேன்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

srinivasan, நட்புடன் புரிந்து கொண்டதற்கு நன்றி. சொற்களில் பிழையில்லை. ஆனால், பயன்படுத்திய சூழல் செயற்கையாகவும் பொருந்தாதாகவும் இருக்கிறது. தமிழ்-> ஆங்கில அகரமுதலியில் இருந்து சிலச் சொற்களை எடுத்து இப்படி எழுதிப் பாருங்களேன். அந்த ஆங்கிலச் சொற்றொடர் கூட வேடிக்கையாக இருக்கும். அது ஆங்கிலத்தின் குறையோ சொற்களின் பிழையோ இல்லை. சொற்களை எந்தச் சூழலில் எப்படி ஆள வேண்டும் என்று அறிந்திருப்பது தான் எழுத்தாளரின் திறமை.

பி.கு - நானும் அண்ணா பல்கலைக்கழக மாணவன். அந்த வளர்தமிழ் மன்றத்தில் சிறு பங்காற்றி இருக்கிறேன் :)