Friday, May 9, 2008

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க - துணுக்குகள் - 6

மார்கழி மாசம் விடியற்காலையில் பனியிலே எழுந்து ஒவ்வொரு தெருவாக பஜனை பாட்டு பாடிட்டுப் போறவங்களை பார்த்திருப்போம். அதுக்கு ஒரு காரணம் இருக்குது. மார்கழி மாசம் தான் நமக்கு ஆரோக்கியம் குடுக்கிற ஓசோன் அதிகமா அதிகாலை நேரத்தில இருக்கும். அதை சுவாசிச்சா உடம்புக்கு ரொம்ப நல்லது.

மார்கழி மாசம் ஏன் கோலம் போட்டு, கோலத்தில பூ வைக்கிறாங்கன்னா, அந்த காலத்தில எந்த வீட்டுல வயசுப் பயனோ வயசுப் பெண்ணோ இருக்காங்களோ அவுங்க வீட்டுல தான் இந்த மாதிரி கோலத்தில பூ வைப்பாங்க. காலையில வீதி வீதீயா பஜனை பாடிட்டு வர்றவங்க கண்ணுல அந்த பூ தென்படும். தை மாசம் பொறந்த உடனே பேசி கல்யானத்தை முடிச்சிடுவாங்க.

சாப்பிடும்போது நம்ம தண்ணி குடிச்சா நிறைய சாப்பிட முடியாதுங்கிற நினைப்பு தப்பு. ஒரு நெல் இருக்கிற பாத்திரத்தில தண்ணி ஊத்தினா நெல் எல்லாம் எப்படி சுருங்கி பாத்திரத்தில கொஞ்சம் இடம் வருதோ, அதே மாதிரி தான் சாப்பிட்டு தண்ணி குடிச்சாலும் வயிற்றுல கொஞ்சம் இடம் வரும்.

வீட்டுல யாகம் வளர்க்கிறது உடம்புக்கு ரொம்ப நல்லது. வீட்டுக்குள்ளே இருக்கிற தீய காற்று தீய கிருமி எல்லாம் வெளியேறிடும். பசும் நெய்யிலே எரிகிற விளக்கு நம்ம சுற்றுப்புறத்தை ரொம்ப சுத்தமாக வைத்திருக்கும்.

பசு சாண விரட்டிச் சாம்பல் எவ்வளவோ இயற்கை வைத்தியம் இருக்குது. தொடைகளுக்கு நடுவில் ஸ்கின் பங்கஸ் என்னும் கிருமி இருக்கும். அதுல இந்த சாம்பல் தடவினா, மூணே நாள்ல ஸ்கின் பங்கஸ் இருந்த இடம் தெரியாம போயிடும். உடம்புல வர்ற புண்களுக்குக் கூட நம்ம இந்த சாம்பலை தடவலாம்.


துணுக்குகள் தொடரும்.......

No comments: