Thursday, May 8, 2008

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க - துணுக்குகள் - 3

நம்ம இந்த காலத்துல டிரெட்மில் என்னும் உடற்பயிற்சி இயந்திரத்தில் உடற்பயிற்சி செய்கிறோம். அதனால பெரிய பிரயோஜனம் எதுவும் கிடையாது. அந்த காலத்தில் விடியற்காலத்தில் எழுந்து சூரிய உதயத்திற்கு முன்பு குளிப்பது எதற்கு என்றால் ஒவ்வொரு இரவும் குளத்து ஆற்று நீரிற்கு ஒரு சக்தி இருக்கும். அது சூரிய உதயத்தின் பிறகு குறைந்து விடும். அது மட்டும் இன்றி குளித்தவுடன் கோயிலுக்குச் செல்வது அதிகாலையின் தூய்மையான காற்ரை சுவாசிக்க உதவுகிறது.

சாப்பிடும்பொழுது நம் ஐம்புலன்களின் கவனமும் நமது உணவின் மீதே இருக்க வேண்டும். பேசவோ அல்லது தொலைக்காட்சிப் பெட்டியோ பார்க்கக் கூடாது.அவ்வாறு இருப்பதனால் நாம் சாப்பிடும் உணவில் உள்ள சக்தி நம் உடம்பில் ஒட்டாது. வியாதி வரும். வாழை இலையில் சாப்பிடுவதனால் ஆரோக்கியமாக இருக்கலாம் மற்றும் இள நரையையும் தடுக்கலாம். அதுப்போல கறிவேப்பிலை துவையலை வாரம் ஒருமுறை சாப்பிட்டாலும் நரை வருவதை தடுக்கலாம். கீரை வகைகளை சாப்பாட்டில் சேர்ப்பதனால் கண் பார்வை, நரம்புகள் எல்லாம் ஆரோக்கியமாக இருக்கும்.

அன்று நம் பெரியவர்கள், வடை சுடும் போதோ, அப்பளம் பொறிக்கும் போதோ அளவாக எண்ணை உபயோகிப்பார்கள். மிச்சமாகும் எண்ணையை அன்றே மற்ற பண்டங்களுக்கு உபயோகித்து விடுவார்கள். ஏன் என்றால், எண்ணையை மறுபடியும் சூடு செய்தால் அது உடல் நலத்திற்கு மிகுந்த கேடு விளைவிக்கும் என்பதால் தான். இதை இன்றைய விஞ்ஞானமும் உறுதி செய்துள்ளது.

துணுக்குகள் தொடரும்.......

No comments: