Thursday, May 22, 2008

சுடுகாட்டில் ஆள் மாறாட்டம்.

பேச்சு வழக்கில் நாம் சுடுகாடுதான் மனிதனுக்கு நிம்மதி தரும் ஒரே இடம் என்று கூறுவதும், அங்கு தான் தில்லுமுல்லுகள் எதுவும் நடக்காது என்று கூறுவதும் வழக்கம். ஆனால் சுடுகாட்டிலும் நடந்த ஆள் மாறாட்டம் பற்றிய பதிவு இது. அமெரிக்க நாட்டில், ஒஹையோ(ohio) மாகாணத்தில், தன் தாயின் அருகில் தான் தானும் புதைக்கப்பட வேண்டும் என்ற ஆசையுடன் சுடுகாட்டில் இடம் வாங்கினார் திரு.டேவிட் எல்.பிங்கம் என்பவர். ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு அவர் சுடுகாட்டுக்குச் சென்று பார்க்கையில் தன் தாயின் அருகில் வேறொரு டேவிட் எல்.பிங்கம் புதைக்கப்பட்டு இருந்தார்.




தாய் இறப்பதற்கு முன்பு, டேவிட்டும் அவரது தாயும் விளையாட்டாக, இருவரும் இறந்தால் அருகருகில் புதைக்கப்பட்டு இரு கல்லறையின் நடுவில் ஒரு குழாய் வைத்து இறந்த பின்னும் பேசிக்கொண்டு இருக்கலாம் என்று பேசிக் கொள்வார்களாம். அதற்காகவே தன் தாயின் கல்லறையின் அருகில் இடம் வாங்கிய டேவிட்டுக்கு எவ்வளவு அதிர்ச்சியாக இருந்து இருக்கும். ம்....கலிகாலம்.

No comments: