நானும் ரொம்ப நாளாக ஏதாவது உருப்படியாக எழுதணும்னு யோசிச்சு யோசிச்சு மண்டை காய்ஞ்சது தான் மிச்சம். ஏதோ தட்டுத் தடுமாறி கடைசியில ஆனந்த விகடனில் பல வருடங்களுக்கு முன்னாடி "சும்மாவா சொன்னாங்க பெரியவங்க" அப்படிங்கிற தலைப்புல பட்டாபின்னு ஒருத்தர் ஒரு அருமையான தொடர் எழுதி இருந்தாரு. இந்த தொடர்ல நம்ம வீட்டுப் பெரியவங்க சொல்லுற சின்ன சின்ன விசயத்திலும் எவ்வளவு உள் அர்த்தங்கள் இருக்குதுன்னு ரொம்ப அழகாக எழுதி இருந்தாரு. நான் அந்தத் தொடர்ல இருந்த முக்கியமான சில துணுக்குகளை இந்தப் பதிவுகளில் பதிய விரும்பி இதோ என் முதல் பதிவு.
* வீட்டுக்குள் நுழைந்தவுடன் காலைக் கழுவுவது என்பது எதற்காக என்றால் நாம் வெளியில் சென்று விட்டு வீட்டுக்குள் வரும்போது நம் கால்களில் ஏராளமான கிருமிகள் ஒட்டி இருக்கும். இக்கிருமிகள் நம் நகக் கண்கள் மூலமாக உடலில் புகுந்து வியாதியை உண்டாக்கும். இது போல சப்பிடுவதுக்கு முன்னும் பின்னும் கால் கழுவுவது ஜீரன உறுப்புகளை பலப்படுத்தி ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
* இன்றைய நவீன கண்டுபிடிப்புகளில் ஒன்றான அணுவைப் பற்றி நம் கம்பராமாயணத்தில் யுத்த காண்டத்தில் ராவணனுக்கு விபீஷணன் யோசனை சொல்லும்போது அவன் ஹிரன்யசகிபு என்பவனைப் பற்றி கூறுவதாக ஒரு குறிப்பு உள்ளது. ஹிரன்யசகிபு தன் மகனான பிரகலாதனிடம் "எங்கே இருக்கிறான் உன் இறைவன்?." என்று கேட்கும்போது, அதற்கு பிரகலாதன், "சாணிலும் உளன். ஓரு தன்மை அணுவினை சத கூறு இட்ட கோணிலும் உளன்!" என்றான். இங்கு நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று என்னவென்றால், அணுவைப் பிளந்து அழிவிற்கோ எரிவாயுவுக்கோ பயன்படுத்தும் இன்றைய விஞ்ஞானம் பற்றி இந்த வரி கூறுவது தான்.அதாவது அணுவைப் பிளந்து ஒரு பகுதிக்கு "கோண்" என்று தமிழ் பெயர் அன்றே நிலுவையில் உள்ளது.
துணுக்குகள் தொடரும்.................
Thursday, May 8, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment