Thursday, May 8, 2008

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க - துணுக்குகள் - 2

* நாம் வெளியில் இருந்து வீட்டுக்குள் நுழைந்தவுடன் தண்ணீர் குடிக்கக் கூடாது என்று வீட்டில் பெரியவர்கள் சொல்வார்கள். இன்றைய விஞ்ஞானமும் அதைத்தான் சொல்கிறது. அதுவும் கண்டிப்பாக ஐஸ் தண்ணீர் குடிக்கக் கூடாது. நாம் வெளியில் இருந்து வீட்டுக்குள் வரும்போது வெளியில் இருக்கும் காற்றழுத்தம், சுற்றுப்புறச் சூழ்நிலை ஆகியவை வீட்டில் இருப்பதைவிட மாறி இருக்கும். ஆதலால் நாம் வீட்டுக்குள் நுழைந்தவுடன் நமது உடல் சிறிது நேரம் சென்ற பின்னே தான் சகஜ நிலை அடையும். அதன் பின்பு தான் தண்ணீர் குடிக்க வேண்டும்.

* கருவில் இருக்கும் குழந்தை எந்தெந்த வாரங்களில் எவ்வளவு வளர்ச்சி அடையும் என்பதை இன்று நாம் ஸ்கேனிங் முறையில் தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அன்று நம் மார்க்கண்டேய புராணம் என்னும் நூலிலேயே இதைப் பற்றி மிக விரிவாக உள்ளது. அம்மா வயிற்றில் உள்ளக் குழந்தை முதல் வாரத்தில் வட்டமாக நுரை வடிவில் இருக்கும். இரண்டாம் வாரத்தில் எழந்தைப் பழம் போன்றும், அதன்பிறகு மாமிசப்பிண்டம் மாதிரியும் இருக்கும்.
முதல் மாத முடிவில் தலையும், இரண்டாவது மாதத்தில் கை-கால்களும், மூன்றாவது மாதத்தில் நகம், முடி, எழும்பு, தோல், ஆண்-பெண் என்ற அடையாளம், காது ஓட்டை, மூக்கு ஓட்டை ஆகியவை உருவாகும்.
நான்காவது மாதத்தில் தோல், இரத்தம், மாமிசம், மேதஸ், எலும்பு, மஜ்ஜை மற்றும் சுக்கிலம் அப்படிங்கிற ஏழு தாதுக்கள் உருவாகும். ஐந்தாவது மாதத்தில் பசி, தாகம் உண்டாகும்.
ஆறாவது மாதத்தில் தாயின் கர்ப்பப்பையில் சுற்றப்பட்டு வயிற்றின் வலப்பக்கம் சுழலும்.
ஏழாவது மாதத்தில் அந்த ஜீவனுக்கு ஞானம் பிறக்கும். போன ஜென்மங்களுடைய நினைவு, இப்பப் பிறக்க வேண்டிய காரணம், தொடர்பு எல்லாம் புரிகிறது. தொப்புள்கொடி வளர்ச்சி அடைந்து அதன் மூலமாக சிசு உணவருந்தும்.அதற்கு அறிவு உண்டாகி ரெண்டு கையையும் கூப்பின மாதிரி வைத்து சாமியிடம் ப்ரார்த்திக்கும். பின்பு பத்தாவது மாதத்தில் குழந்தை பிறக்கும்.

இந்த அறிய விசயங்களை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னவர் வியாச பகவான்.


துணுக்குகள் தொடரும்.......

1 comment:

Anonymous said...

Nice Post !
Use a Tamil social bookmarking widget like PrachaarThis to let your users easily bookmark your blog posts.