மார்கழி மாசம் விடியற்காலையில் பனியிலே எழுந்து ஒவ்வொரு தெருவாக பஜனை பாட்டு பாடிட்டுப் போறவங்களை பார்த்திருப்போம். அதுக்கு ஒரு காரணம் இருக்குது. மார்கழி மாசம் தான் நமக்கு ஆரோக்கியம் குடுக்கிற ஓசோன் அதிகமா அதிகாலை நேரத்தில இருக்கும். அதை சுவாசிச்சா உடம்புக்கு ரொம்ப நல்லது.
மார்கழி மாசம் ஏன் கோலம் போட்டு, கோலத்தில பூ வைக்கிறாங்கன்னா, அந்த காலத்தில எந்த வீட்டுல வயசுப் பயனோ வயசுப் பெண்ணோ இருக்காங்களோ அவுங்க வீட்டுல தான் இந்த மாதிரி கோலத்தில பூ வைப்பாங்க. காலையில வீதி வீதீயா பஜனை பாடிட்டு வர்றவங்க கண்ணுல அந்த பூ தென்படும். தை மாசம் பொறந்த உடனே பேசி கல்யானத்தை முடிச்சிடுவாங்க.
சாப்பிடும்போது நம்ம தண்ணி குடிச்சா நிறைய சாப்பிட முடியாதுங்கிற நினைப்பு தப்பு. ஒரு நெல் இருக்கிற பாத்திரத்தில தண்ணி ஊத்தினா நெல் எல்லாம் எப்படி சுருங்கி பாத்திரத்தில கொஞ்சம் இடம் வருதோ, அதே மாதிரி தான் சாப்பிட்டு தண்ணி குடிச்சாலும் வயிற்றுல கொஞ்சம் இடம் வரும்.
வீட்டுல யாகம் வளர்க்கிறது உடம்புக்கு ரொம்ப நல்லது. வீட்டுக்குள்ளே இருக்கிற தீய காற்று தீய கிருமி எல்லாம் வெளியேறிடும். பசும் நெய்யிலே எரிகிற விளக்கு நம்ம சுற்றுப்புறத்தை ரொம்ப சுத்தமாக வைத்திருக்கும்.
பசு சாண விரட்டிச் சாம்பல் எவ்வளவோ இயற்கை வைத்தியம் இருக்குது. தொடைகளுக்கு நடுவில் ஸ்கின் பங்கஸ் என்னும் கிருமி இருக்கும். அதுல இந்த சாம்பல் தடவினா, மூணே நாள்ல ஸ்கின் பங்கஸ் இருந்த இடம் தெரியாம போயிடும். உடம்புல வர்ற புண்களுக்குக் கூட நம்ம இந்த சாம்பலை தடவலாம்.
துணுக்குகள் தொடரும்.......
Friday, May 9, 2008
Thursday, May 8, 2008
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க - துணுக்குகள் - 5
ஒவ்வொரு வீட்டிலேயும் மகாலட்சுமி இருப்பது போல் கிரகலட்சுமியும் இருப்பாள். ஆதலால் வீட்டினுள் குழந்தைகளை "நாசமாகப் போ" என்று யாரும் திட்டக் கூடாது. அவ்வாறு கூறினால் "அப்படியே பலிக்கட்டும்" அப்படின்னு ஆசிர்வாதம் பண்ணிடுவா. அதற்காகத்தான் அந்த காலத்தில் யாரையாவது திட்ட வேண்டும் என்றால் ""நாசமத்துப் போ"என்பார்கள்.அதாவது திட்டும் போது கூட ""நாசமாகப் போகாதே" என்றுதான் ஏசுவார்கள்.
பெண்கள் மூச்சுக் காற்றுக்கு ஆண்களை விட ஸ்டெமினா அதிகம். அந்த மூச்சுக்காற்று எதிர்ல இருக்கிறவங்க மேல படக் கூடாது.அதனாலதான் பெண்கள் மூக்குத்தி அணிகிறார்கள்.
மலைகள்ல எல்லாம் சாமியை வச்சு, மக்கள் மலையேறி பூஜை செய்யனும்கிறதே மக்களின் ஆரோக்கியம் கருதி தான்.ஒவ்வொரு மலை மேலேயும் சுத்தமான மூலிகைக் காற்று இருக்குது. மலை ஏறுறதுனால உடம்புல இருக்கிற கெட்டது எல்லாம் வேர்வையாகவும், ஊளை சதை எல்லாம் கரைஞ்சுப் போகுது. நம் நுரையீரல், நாடி, நரம்பு எல்லாம் வலுவாகுது.
துணுக்குகள் தொடரும்.........

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க - துணுக்குகள் - 4
வீட்டு வைத்தியம் பற்றி பட்டாபி குறிப்பிடுகையில், ஜலதோஷத்திற்கு மிகச் சிறந்த மருந்து, நாட்டு வைத்தியக் கடைகளில் கிடைக்கும் சித்தரத்தை வேர். இந்த வேரை வாயில் போட்டு, உருவாகும் உமிழ் நீரை முழுங்கி வந்தால் ஜலதோஷம் சரியாகும் என்றார். ஜலதோஷத்துடன் இருமலும் இருந்தால், சித்தரத்தை வேருடன் சிறிது பனங்கல்கண்டு கலந்து காய வைத்து கசாயமாக அருந்தலாம்.சித்தரத்தை வேரைப் போலவே அதிமதுர வேரையும் கொதிக்க வைத்து குடிக்கலாம்.
புராணத்தின்படி, விரதத்திலேயே சிறந்த விரதம் உண்ணும் உணவை பழிக்காமல் இருப்பதும், வீணாக்காமலும் இருப்பதும் தான். திருவள்ளுவர் தான் சாப்பிட அமரும்போது ஒரு கிண்ணத்தில் தண்ணீரும் ஊசியும் எடுத்துக்கொண்டு தான் அமர்வாராம். ஏன் என்றால் ஏதாவது பருக்கை கீழே சிந்தினாலும், அதை ஊசியால் குத்தி தண்ணீரில் கழுவி உண்பார்.
தானத்திலே சிறந்த தானம் அன்னதானம் தான்.மஹாபாரதத்தில் கர்ணன் அனைத்து தர்மங்களும் செய்து இருக்கிறார். ஆனால் செய்யாத ஒரே தானம் அன்னதானம் தான். அன்னதானம் செய்வதற்காகவே மறுபடியும் சிறுதொண்டநாயனாராக பிறந்தார் என சிறுதொண்டநாயனார் கதையில் உள்ளது.
துணுக்குகள் தொடரும்......

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க - துணுக்குகள் - 3
நம்ம இந்த காலத்துல டிரெட்மில் என்னும் உடற்பயிற்சி இயந்திரத்தில் உடற்பயிற்சி செய்கிறோம். அதனால பெரிய பிரயோஜனம் எதுவும் கிடையாது. அந்த காலத்தில் விடியற்காலத்தில் எழுந்து சூரிய உதயத்திற்கு முன்பு குளிப்பது எதற்கு என்றால் ஒவ்வொரு இரவும் குளத்து ஆற்று நீரிற்கு ஒரு சக்தி இருக்கும். அது சூரிய உதயத்தின் பிறகு குறைந்து விடும். அது மட்டும் இன்றி குளித்தவுடன் கோயிலுக்குச் செல்வது அதிகாலையின் தூய்மையான காற்ரை சுவாசிக்க உதவுகிறது.
சாப்பிடும்பொழுது நம் ஐம்புலன்களின் கவனமும் நமது உணவின் மீதே இருக்க வேண்டும். பேசவோ அல்லது தொலைக்காட்சிப் பெட்டியோ பார்க்கக் கூடாது.அவ்வாறு இருப்பதனால் நாம் சாப்பிடும் உணவில் உள்ள சக்தி நம் உடம்பில் ஒட்டாது. வியாதி வரும். வாழை இலையில் சாப்பிடுவதனால் ஆரோக்கியமாக இருக்கலாம் மற்றும் இள நரையையும் தடுக்கலாம். அதுப்போல கறிவேப்பிலை துவையலை வாரம் ஒருமுறை சாப்பிட்டாலும் நரை வருவதை தடுக்கலாம். கீரை வகைகளை சாப்பாட்டில் சேர்ப்பதனால் கண் பார்வை, நரம்புகள் எல்லாம் ஆரோக்கியமாக இருக்கும்.
அன்று நம் பெரியவர்கள், வடை சுடும் போதோ, அப்பளம் பொறிக்கும் போதோ அளவாக எண்ணை உபயோகிப்பார்கள். மிச்சமாகும் எண்ணையை அன்றே மற்ற பண்டங்களுக்கு உபயோகித்து விடுவார்கள். ஏன் என்றால், எண்ணையை மறுபடியும் சூடு செய்தால் அது உடல் நலத்திற்கு மிகுந்த கேடு விளைவிக்கும் என்பதால் தான். இதை இன்றைய விஞ்ஞானமும் உறுதி செய்துள்ளது.

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க - துணுக்குகள் - 2
* நாம் வெளியில் இருந்து வீட்டுக்குள் நுழைந்தவுடன் தண்ணீர் குடிக்கக் கூடாது என்று வீட்டில் பெரியவர்கள் சொல்வார்கள். இன்றைய விஞ்ஞானமும் அதைத்தான் சொல்கிறது. அதுவும் கண்டிப்பாக ஐஸ் தண்ணீர் குடிக்கக் கூடாது. நாம் வெளியில் இருந்து வீட்டுக்குள் வரும்போது வெளியில் இருக்கும் காற்றழுத்தம், சுற்றுப்புறச் சூழ்நிலை ஆகியவை வீட்டில் இருப்பதைவிட மாறி இருக்கும். ஆதலால் நாம் வீட்டுக்குள் நுழைந்தவுடன் நமது உடல் சிறிது நேரம் சென்ற பின்னே தான் சகஜ நிலை அடையும். அதன் பின்பு தான் தண்ணீர் குடிக்க வேண்டும்.
* கருவில் இருக்கும் குழந்தை எந்தெந்த வாரங்களில் எவ்வளவு வளர்ச்சி அடையும் என்பதை இன்று நாம் ஸ்கேனிங் முறையில் தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அன்று நம் மார்க்கண்டேய புராணம் என்னும் நூலிலேயே இதைப் பற்றி மிக விரிவாக உள்ளது. அம்மா வயிற்றில் உள்ளக் குழந்தை முதல் வாரத்தில் வட்டமாக நுரை வடிவில் இருக்கும். இரண்டாம் வாரத்தில் எழந்தைப் பழம் போன்றும், அதன்பிறகு மாமிசப்பிண்டம் மாதிரியும் இருக்கும்.
முதல் மாத முடிவில் தலையும், இரண்டாவது மாதத்தில் கை-கால்களும், மூன்றாவது மாதத்தில் நகம், முடி, எழும்பு, தோல், ஆண்-பெண் என்ற அடையாளம், காது ஓட்டை, மூக்கு ஓட்டை ஆகியவை உருவாகும்.
நான்காவது மாதத்தில் தோல், இரத்தம், மாமிசம், மேதஸ், எலும்பு, மஜ்ஜை மற்றும் சுக்கிலம் அப்படிங்கிற ஏழு தாதுக்கள் உருவாகும். ஐந்தாவது மாதத்தில் பசி, தாகம் உண்டாகும்.
ஆறாவது மாதத்தில் தாயின் கர்ப்பப்பையில் சுற்றப்பட்டு வயிற்றின் வலப்பக்கம் சுழலும்.
ஏழாவது மாதத்தில் அந்த ஜீவனுக்கு ஞானம் பிறக்கும். போன ஜென்மங்களுடைய நினைவு, இப்பப் பிறக்க வேண்டிய காரணம், தொடர்பு எல்லாம் புரிகிறது. தொப்புள்கொடி வளர்ச்சி அடைந்து அதன் மூலமாக சிசு உணவருந்தும்.அதற்கு அறிவு உண்டாகி ரெண்டு கையையும் கூப்பின மாதிரி வைத்து சாமியிடம் ப்ரார்த்திக்கும். பின்பு பத்தாவது மாதத்தில் குழந்தை பிறக்கும்.
இந்த அறிய விசயங்களை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னவர் வியாச பகவான்.

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க - துணுக்குகள் - 1
நானும் ரொம்ப நாளாக ஏதாவது உருப்படியாக எழுதணும்னு யோசிச்சு யோசிச்சு மண்டை காய்ஞ்சது தான் மிச்சம். ஏதோ தட்டுத் தடுமாறி கடைசியில ஆனந்த விகடனில் பல வருடங்களுக்கு முன்னாடி "சும்மாவா சொன்னாங்க பெரியவங்க" அப்படிங்கிற தலைப்புல பட்டாபின்னு ஒருத்தர் ஒரு அருமையான தொடர் எழுதி இருந்தாரு. இந்த தொடர்ல நம்ம வீட்டுப் பெரியவங்க சொல்லுற சின்ன சின்ன விசயத்திலும் எவ்வளவு உள் அர்த்தங்கள் இருக்குதுன்னு ரொம்ப அழகாக எழுதி இருந்தாரு. நான் அந்தத் தொடர்ல இருந்த முக்கியமான சில துணுக்குகளை இந்தப் பதிவுகளில் பதிய விரும்பி இதோ என் முதல் பதிவு.
* வீட்டுக்குள் நுழைந்தவுடன் காலைக் கழுவுவது என்பது எதற்காக என்றால் நாம் வெளியில் சென்று விட்டு வீட்டுக்குள் வரும்போது நம் கால்களில் ஏராளமான கிருமிகள் ஒட்டி இருக்கும். இக்கிருமிகள் நம் நகக் கண்கள் மூலமாக உடலில் புகுந்து வியாதியை உண்டாக்கும். இது போல சப்பிடுவதுக்கு முன்னும் பின்னும் கால் கழுவுவது ஜீரன உறுப்புகளை பலப்படுத்தி ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
* இன்றைய நவீன கண்டுபிடிப்புகளில் ஒன்றான அணுவைப் பற்றி நம் கம்பராமாயணத்தில் யுத்த காண்டத்தில் ராவணனுக்கு விபீஷணன் யோசனை சொல்லும்போது அவன் ஹிரன்யசகிபு என்பவனைப் பற்றி கூறுவதாக ஒரு குறிப்பு உள்ளது. ஹிரன்யசகிபு தன் மகனான பிரகலாதனிடம் "எங்கே இருக்கிறான் உன் இறைவன்?." என்று கேட்கும்போது, அதற்கு பிரகலாதன், "சாணிலும் உளன். ஓரு தன்மை அணுவினை சத கூறு இட்ட கோணிலும் உளன்!" என்றான். இங்கு நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று என்னவென்றால், அணுவைப் பிளந்து அழிவிற்கோ எரிவாயுவுக்கோ பயன்படுத்தும் இன்றைய விஞ்ஞானம் பற்றி இந்த வரி கூறுவது தான்.அதாவது அணுவைப் பிளந்து ஒரு பகுதிக்கு "கோண்" என்று தமிழ் பெயர் அன்றே நிலுவையில் உள்ளது.
துணுக்குகள் தொடரும்.................

Tuesday, April 29, 2008
Sunday, April 27, 2008
Subscribe to:
Posts (Atom)